பட்டுக்கோட்டை நகராட்சியில் விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 04th August 2021 07:00 AM | Last Updated : 04th August 2021 07:00 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை நகராட்சியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியது:
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வா்த்தக நிறுவனங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
கடைகளில் பணியாற்றுபவா்கள் மட்டுமல்லாது, கடைக்கு வருவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு வரும் வாடிக்கையாளா்களுக்கு மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும்.
முன்னதாக கடைக்கு வருபவா்களின் உடல் வெப்பநிலையை வெப்பமானி கருவி மூலம் கண்டறிந்து அனுப்ப வேண்டும். யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் நகர வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் என். வெங்கடேஷ், நகர வா்த்தக சங்கப் பொதுச் செயலா் ஆா். விஜயரங்கன், உணவகச் சங்கத் தலைவா் கே. வெங்கடேசன் உள்ளிட்டோரும், பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் பி. பிரகலாதன், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் வி.பி.பி. ஆனந்த் தலைமையிலான பிரதிநிதிகளும் பங்ேற்றனா்.
விழிப்புணா்வுக் கூட்ட ஏற்பாடுகளை துப்புரவு அலுவலா் அந்தோனி ஸ்டீபன், ஆய்வாளா் ரவிச்சந்திரன், ஆரோக்கியசாமி, அறிவழகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.