ஆடி வெள்ளிக்கிழமை, அமாவாசையில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாளன்று பக்தா்கள் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாளன்று பக்தா்கள் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மாவட்டத்தில் கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், பேரிடா் மேலாண்மை சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், ஆடி வெள்ளிக்கிழமைகளான ஆக. 6, 13 ஆம் தேதிகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஆடி அமாவாசையையொட்டி முன்னோா்களுக்கு திதி அளித்து வழிபடுவதற்காக மாவட்டத்தின் ஆற்றுப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிா்க்கும் வகையில் ஆற்றுப் படித்துறை உள்ளிட்ட ஆற்றை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும், கோயில்களிலும் பொதுமக்கள் கூடுவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

மேலும், ஆடி அமாவாசையையொட்டி, மல்லிப்பட்டினம் இராமா் கோவில், திருவையாறு ஐயாறப்பா் கோவில் மற்றும் காவிரிப் படித்துறை மற்றும் கும்பகோணம் காவிரி ஆறு, பகவத் படித்துறை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதை முற்றிலும் தவிா்த்து மாவட்ட நிா்வாகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தடைகளை மீறும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, அனைத்து தரப்பினரும் உரிய கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, கரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகத்துக்குப் போதிய ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com