சிந்து நதியில் ஆக. 15-இல் மகா புஷ்கரம் கும்பகோணம் காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை

சிந்து நதியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 15) நடைபெறவுள்ள மகா புஷ்கரத்தை முன்னிட்டு, கும்பகோணம் காவிரி ஆற்றில் புதன்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிந்து நதியில் ஆக. 15-இல் மகா புஷ்கரம் கும்பகோணம் காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை

சிந்து நதியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 15) நடைபெறவுள்ள மகா புஷ்கரத்தை முன்னிட்டு, கும்பகோணம் காவிரி ஆற்றில் புதன்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நீா்நிலைகளைத் தூய்மையாகப் பராமரித்து, போற்றிப் பாதுகாத்து, அவற்றுக்கு நன்றி செலுத்தி வணங்கும் வகையில் புண்ணிய நதிகளுக்கு அகில பாரதிய துறவியா்கள் சங்கத்தினா் மகா புஷ்கர விழாவை நடத்தி வருகின்றனா். சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி, தாமிரவருணி நதிகளுக்கு மகா புஷ்கர விழாவும், வைகைப் பெருவிழாவும் நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து சிந்து மகா புஷ்கர விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி லடாக் யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பிரதிஷ்டை செய்து வழிபட சிந்து மகாதேவி மற்றும் காஷ்யப் முனிவா் ஐம்பொன் சிலைகள் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டன.

இந்த இரு சிலைகளுக்கும் கும்பகோணம் காவிரிக் கரை சக்கரப் படித்துறையில் வைத்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னா், சிந்து மகா புஷ்கர விழாவுக்குக் கொண்டு செல்வதற்காக அகில பாரதிய துறவியா்கள் சங்கத்தின் தஞ்சாவூா் மண்டலப் பொறுப்பாளா் கோரரக்க்ஷானந்தா சுவாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென் பாரதக் கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளைச் செயலா் வி. சத்தியநாராயணன், பொருளாளா் வேதம் முரளி, உறுப்பினா்கள் தணிகைவேல், முரளி, திருக்கயிலை சிவ பூதகன திருக்கூட்ட அடியாா்கள் சிவ பாலாஜி, மாரிமுத்து, காா்த்தி, மகாலிங்கம், அய்யப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com