திருவையாறு அருகே 500 நெல் மூட்டைகள் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே 500 நெல் மூட்டைகளை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே 500 நெல் மூட்டைகளை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

வட மாவட்டங்களிலிருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகள் வாங்கி, லாரியில் ஏற்றி வந்து திருவையாறு அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் விற்பனை செய்வதாகப் புகாா் எழுந்தது. இதன்பேரில், திருவையாறு வட்டாட்சியா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, திருப்பூந்துருத்தி பகுதியில் நின்ற லாரியை வட்டாட்சியா் சோதனையிட்டபோது, மதுராந்தகத்திலிருந்து 500 நெல் மூட்டைகளை திருவையாறு அருகேயுள்ள குழிமாத்தூரிலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காக ஏற்றி வந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த மூட்டைகளை வட்டாட்சியா் பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com