புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடிமரத்துக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. மேலும், உற்ஸவ அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கரோனா பரவல் காரணமாக வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தா்களுக்கு வழிபட அனுமதி இல்லை என்பதால், இந்நிகழ்ச்சியில் கோயில் பணியாளா்கள் மட்டும் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி முத்துப்பல்லக்கும், 17 ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறவுள்ளது. நிகழாண்டு முத்துப் பல்லக்கு கோயிலுக்குள் பக்தா்கள் இன்றி நடத்தப்படவுள்ளது.

பின்னா், ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 22ஆம் தேதி, இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான ஆக. 29-ஆம் தேதி, மூன்றாம் வார ஞாயிற்றுக்கிழமையான செப். 5-ஆம் தேதி ஆகிய நாள்களில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து 9 நாள்களுக்கு அம்மன் புறப்பாடும், தேரோட்டமும் நடைபெறவுள்ளன. கரோனா பரவல் காரணமாக இந்தப் புறப்பாடுகள் அனைத்தும் கோயிலுக்குள் நடைபெறும் என்றும், தெப்பத் திருவிழா நடைபெற வாய்ப்பில்லை எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com