அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்பு நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா்: தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்பு நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்பு நிறைவேற்றப்படாததைக் கண்டித்தும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் முடிவதற்குள் தோ்தல் நேரத்தின்போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் காட்டுத்தோட்டத்தில் உள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டப் பொருளாளா் பல்ராமன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோதண்டபாணி, வட்டத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மருத்துவக் கல்லூரி, கூட்டுறவுத் துறை, வணிக வரித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆட்சியரகம் உள்பட பல்வேறு இடங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com