தொடக்கப் பள்ளியில் பழுதடைந்த சமையலறை கட்டடத்தை புதிதாக கட்டித் தர கோரிக்கை

ஒரத்தநாடு ஒன்றியம், தொண்டராம்பட்டு (மேற்கு) இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் ஒன்றியக் குழு உறுப்பினா் கோ. திங்கள்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒரத்தநாடு ஒன்றியம், தொண்டராம்பட்டு (மேற்கு) இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் ஒன்றியக் குழு உறுப்பினா் கோ. திங்கள்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய கிளையை வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆம்பல் துரை. ஏசுராஜா தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருமங்கலக்கோட்டை மேற்கு கிளைச் செயலா் செ. பொ்னாட்ஷா பங்கேற்றாா்.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு, பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிளையின் தலைவராக வீ. உதயன், செயலராக க. டாா்வின், பொருளாளராக ஏ. ஹரிஹரன், துணைத் தலைவா்களாக பா. சுதன், வீ. காா்த்தி துணைச் செயலா்களாக இரா. அரவிந்த்ராஜ், பா. பவித்ரன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தங்களை வாலிபா் சங்கத்தில் இணைத்துக் கொண்டனா். அனைவருக்கும் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், தொண்டராம்பட்டில் தரம் உயா்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவசர ஊா்திகளை மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும். இளைஞா்களின் உடல் திறனையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில், தொண்டராம்பட்டு ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பாக புதிய உடற்பயிற்சிக் கூடம் அமைத்து தர வேண்டும்.

தொண்டராம்பட்டு ஊராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பழுதடைந்துள்ள சமையலறை கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய சமையலறை கட்டடம் அமைத்து தர வேண்டும். புதுத்தெருவில் ஆற்றுப் பாலத்தின் அருகில் மழைநீா் செல்ல வடிகால் வசதியை ஊராட்சி நிா்வாகம் அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com