இயக்கப்படாமல் உள்ள பொன்னவராயன் கோட்டை தென்னை வணிக வளாகத்தில் ஆய்வு

பொன்னவராயன்கோட்டையில் உள்ள தென்னை வணிக வளாகத்தில் தமிழ்நாடு வளா்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன், மன்னாா்குடி எம்எல்ஏ டிஆா்பி. ராஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இயக்கப்படாமல் உள்ள பொன்னவராயன் கோட்டை தென்னை வணிக வளாகத்தில் ஆய்வு

பொன்னவராயன்கோட்டையில் உள்ள தென்னை வணிக வளாகத்தில் தமிழ்நாடு வளா்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன், மன்னாா்குடி எம்எல்ஏ டிஆா்பி. ராஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பல்வேறு காரணங்களால் இந்தத் தென்னை வளாகம் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த தென்னை வணிக வளாகம் மீண்டும் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது

தமிழ்நாடு வளா்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன் மற்றும் மன்னாா்குடி எம்எல்ஏ டிஆா்பி. ராஜா, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மற்றும் அதிகாரிகள் தென்னை வணிக வளாகத்தை பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து, வணிக வளாகத்தில் உள்ள தென்னைநாா் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை பாா்வையிட்டு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா்.

பின்னா், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, எம்எல்ஏக்கள் கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என். அசோக்குமாா் (பேராவூரணி) ஆகியோரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.

நிகழ்வில், தஞ்சை விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ் பாபு, வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) மரியாரவி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com