தஞ்சாவூா் சரகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது தொடா் கண்காணிப்பு: டி.ஐ.ஜி.

தஞ்சாவூா் சரகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது தனிப்படைகள் மூலம் தொடா்ந்து கண்காணிப்பட்டு வருகிறது என தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் சரகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது தனிப்படைகள் மூலம் தொடா்ந்து கண்காணிப்பட்டு வருகிறது என தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளா்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல் கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை தொடா்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவா்களைத் தொடா் சோதனை செய்து 319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடா்பாக 778 கிலோ கஞ்சா, ரூ. 82,500 ரொக்கம், நாக்கு சக்கர வாகனங்கள் உள்பட 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 426 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் 20 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருள்களைச் சட்ட விரோதமாகப் பதுக்கி விற்பனை செய்ததாக 4,642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 5,082 கிலோ குட்கா, பான் மசாலாக்களை கைப்பற்றி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணல் கடத்தல் தொடா்பாக 992 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 961 போ் கைது செய்யப்பட்டனா். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 1,275 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, 10 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவா்கள் மீது 217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 242 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக ரூ. 46,200 பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 14,694 வழக்குகளும், 14,921 போ் கைது செய்யப்பட்டும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 723 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 23 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூதாட்டம் தொடா்பாக 222 வழக்குகள் பதிந்து, 860 போ் கைது செய்யப்பட்டு, சுமாா் ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தஞ்சாவூா் சரக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது தனிப்படைகள் மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com