தில்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய விவசாயிகள் குழுவினருக்கு வரவேற்பு
By DIN | Published On : 22nd August 2021 01:54 AM | Last Updated : 22nd August 2021 01:54 AM | அ+அ அ- |

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய விவசாயிகள் குழுவினருக்கு பாபநாசத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் சாமு. தா்மராஜன் தலைமையில், ஒன்றியத் தலைவா் ராஜமாணிக்கம், நிா்வாகக் குழு உறுப்பினா் திருநாவுக்கரசு உள்ளிட்ட விவசாயிகள் பாபநாசத்திலிருந்து புதுதில்லிக்குச் சென்று, ஒரு வாரக் காலம் போராட்டத்தில் பங்கேற்றனா்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை பாபநாசம் திரும்பிய விவசாயிகள் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா், தொழிற்சங்க நிா்வாகிகள் செல்வராஜ், ஜோதி, ராமன், விவசாய சங்கப் பிரதிநிதி பொய்யாமொழி, கனகசபை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.