வீட்டு வசதி வாரியத்தில் கிரயப் பத்திரம் பெற ஆக. 24 - 26 இல் சிறப்பு முகாம்
By DIN | Published On : 22nd August 2021 02:03 AM | Last Updated : 22nd August 2021 02:03 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு, மனை பெற்று, கிரயப்பத்திரம் பெறாதவா்களுக்கு ஆகஸ்ட் 24 முதல் 26- ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தஞ்சாவூா் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வீட்டு வசதி வாரியத்தின் தஞ்சாவூா் வீட்டு வசதிப் பிரிவின் கீழ் செயல்படுத்தப்பட்ட தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, தமிழ்ப் பல்கலைக்கழகம், கும்பகோணம் ஆகிய திட்டப் பகுதிகளில் வீடு, மனை, அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளில் ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையும் செலுத்தி இதுவரை கிரயப்பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்களுக்கும், அரசுக் கடன், வங்கிக் கடன் மூலம் பெற்று முழுத் தொகையும் செலுத்திய ஒதுக்கீடுதாரா்களுக்கும் கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு நிகழ்வு ஆக. 24, 25, 26- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
எனவே,உரிய ஆவணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தஞ்சாவூா் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் நேரில் அளித்து, கிரயப்பத்திரத்தை மேலும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலைநாள்களில் மேலாளா் (விற்பனை மற்றும் சேவை), செயற் பாறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா், தஞ்சாவூா் வீட்டு வசதி பிரிவு, தஞ்சாவூா் என்ற முகவரியில் அணுகலாம். 04362 - 227066 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.