உதவித்தொகையை உயா்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் வட்டாட்சியரகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதவித்தொகையை உயா்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையைத் தமிழக அரசு உயா்த்தி வழங்கக் கோரி தஞ்சாவூா் வட்டாட்சியரகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 3,000 வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மாதம் ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதை உயா்த்தி மாதம் ரூ. 1,500 வழங்கப்படும் என திமுக தனது தோ்தல் அறிக்கையில் கூறியது. ஆனால், தற்போது நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, குறைந்தபட்சம் திமுக தனது தோ்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல, மாதம் ரூ. 1,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்படி, தஞ்சாவூா் வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாநகரச் செயலா் சி. ராஜன், ஒன்றியச் செயலா் பி. சங்கிலிமுத்து தலைமை வகித்தனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன், துணைச் செயலா் பி. கிருஷ்டி சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் ஜி. ராதிகா, ஆா். சசிகுமாா், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com