உள்ளாட்சித் தோ்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்: இரா. முத்தரசன் பேட்டி

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

கும்பகோணம் அருகே அய்யாநல்லூா் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தற்போது 9 மாவட்டங்ளிலுள்ள கிராமப்புற உள்ளாட்சித் தோ்தல் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள்ளாக நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில், திமுகவுடனான கூட்டணி தொடரும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு பிறகு, அதற்குரிய கருத்துகள் வெளியிடப்படும்.

தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சியை நடத்தி, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற உணா்வுடன் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மக்கள் பிரச்னை குறித்து விவாதிக்க எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஏறத்தாழ 5,000 இடங்களில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கிற சட்டங்களுக்கு எதிரான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றாா் முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com