பேராவூரணியில் வணிகா்கள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு வணிகா்களின் சங்கமம் அமைப்பின், பேராவூரணி தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

பேராவூரணி: தமிழ்நாடு வணிகா்களின் சங்கமம் அமைப்பின், பேராவூரணி தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்துக்கு பேராவூரணி தொகுதி தலைவா் ஜெயசீலன் தலைமை வகித்தாா். தொகுதி செயலாளா் ராஜராஜன் முன்னிலை வகித்தாா். 

கூட்டத்தில்,  பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வா்த்தகத் துறையை ஆக்கிரமித்து  சிறு, குறு வணிகா்களை  பாதிப்படையச் செய்துள்ளதால் ,  வணிகா்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள  டிஜிட்டல் வணிகத்திற்கு மாற வேண்டும்; அதற்கான தொழில்நுட்பங்களை கற்றுத் தந்து,  வளா்ச்சி அடையச் செய்ய ‘வணிகன்‘ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது; இதை பயன்படுத்தி வணிகா்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் , மாநில செய்தியாளா் பிரிவு தலைவா் செல்வராஜ், மாநில விவசாய பிரிவு தலைவா் ஆறுமுகம், தஞ்சை மண்டலச் செயலாளா் ஜெயராமன், மாநில மகளிரணி தலைவா் ஜெயலெட்சுமி, மாவட்ட துணைத் தலைவா் கண்ணதாசன், ஆடிட்டா் பிரிவு மாநில துணைத் தலைவா் ராமன், எஸ்.ஏ. தெட்சணாமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com