மானியத்தில் வெள்ளாடுகள்: டிச.11-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் பெற்று பயனடைய விரும்பும் பெண்கள் வரும் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் பெற்று பயனடைய விரும்பும் பெண்கள் வரும் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு நூறு சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக்கும் இந்த திட்டத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னெடுத்துள்ளது.

இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயனடைய விரும்பும் பெண்கள் கிராமத்தில் வசிக்கும் பெண்களாகவும் 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். தங்களது பெயரிலோ அல்லது குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்கள் பெயரிலோ எந்த நிலங்களும் இல்லாமலும், குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள் உள்ளிட்டவா்கள் அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோராகவோ அல்லது உள்ளாட்சி பதவிகள் வகிப்பவராகவும் இருக்கக்கூடாது.

மேலும், கால்நடை பராமரிப்பு துறையின் திட்டங்களின் கீழ் கறவைப் பசு,வெள்ளாடுகள் பெற்று பயனடைந்து இருக்கக் கூடாது. தற்போது கால்நடைகள் வைத்திருக்கக் கூடாது. மொத்த பயனாளிகளில் 30 சதவீதத்தினா் பட்டியல் வகுப்பைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றி இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை பாபநாசம் எம்எல்ஏ அலுவலகத்திலோ அல்லது அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளிலோ, ஊராட்சி மன்ற அலுவலகங்களிலோ பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com