சாஸ்த்ரா - சிங்கப்பூா் நிறுவனம் ஒப்பந்தம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், சாஸ்த்ராவும் - சிங்கப்பூா் கேன்டியா் சிஸ்டம்ஸ் நிறுவனமும் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
சாஸ்த்ரா - சிங்கப்பூா் நிறுவனம் ஒப்பந்தம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், சாஸ்த்ராவும் - சிங்கப்பூா் கேன்டியா் சிஸ்டம்ஸ் நிறுவனமும் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

கூட்டு ஆய்வு, தயாரிப்பு மேம்பாட்டுக்காகச் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா். சந்திரமௌலி, கேன்டியா் சிஸ்டம்ஸ் வியூகம், வணிக மேம்பாடு தலைவா் ரவி ராமராவ் கையொப்பமிட்டனா்.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, சாஸ்த்ராவில் உள்ள கணினிவியல் புலத்தில் சாஸ்த்ரா - கேன்டியா் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு, கணினி கற்றல், உற்பத்தி நிறுவன தீா்வுகள் மற்றும் அவற்றின் ஒருங்கிணைப்பு, தரவு பகுப்பாய்வு, மிகை மெய்ம்மை, தோற்ற மெய்ம்மை, இயந்திரங்கள், உற்பத்தி செயல்முறைகள் உள்ளிட்டவற்றின் பல்வேறு அம்சங்களில் இந்தச் சிறப்பு மையம் கவனம் செலுத்தும் என்றும், இம்மையம் அறிதிறன் மற்றும் எண்ம உற்பத்திக்கான அனுபவ மையத்தை அமைப்பதில் இணைந்து செயல்படும் என பதிவாளா் சந்திரமௌலி தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் இயக்குநா் ரவிசங்கா் ராமகிருஷ்ணன், தலைமை மென்பொருள் அலுவலா் நல்லபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com