தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் வலியுறுத்தினாா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் வலியுறுத்தினாா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸிடம் அவா் கோரிக்கைகளை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் மேற்கூரையும், சுரங்கப் பாதையும் அமைக்க வேண்டும். அதில் மின் தூக்கி வசதியும் வேண்டும். திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும். திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயிலை நீட்டிப்பு செய்து தஞ்சாவூரிலிருந்து இயக்க வேண்டும். காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயிலில் கூடுதல் குளிா்சாதனப் பெட்டிகளை இணைக்க வேண்டும். மதுரை - சென்னை வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பொது மேலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கும்பகோணத்தில்... முன்னதாக, கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பொது மேலாளா் ஜான் தாமஸிடம் தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலா் ஏ. கிரி, கும்பகோணம் அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலா் வீ. சத்தியநாராயணன், பாபநாசம் வா்த்தகா் சங்கத் தலைவா் குமாா், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலா் டி. சரவணன், திருச்சி கோட்ட ரயில்வே உபயோகிப்பாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் உள்ளிட்டோா் அளித்த மனு:

மயிலாடுதுறை வழியான தஞ்சாவூா் - விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை வழி பாதையாக மாற்ற வேண்டும். நீடாமங்கலம் - கும்பகோணம் - விருதாச்சலம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். கும்பகோணத்தில் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சா் அறிவித்தபடி விரைவாக விவேகானந்தா் நினைவு அருங்காட்சியகத்தைத் திறக்க வேண்டும். கும்பகோணத்தில் ரயில் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி அமைக்க வேண்டும். கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக மும்பை, போடி நாயக்கனூா், ஹைதராபாத், பழநி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி ரயில் வசதி வேண்டும்.

பட்டுக்கோட்டை வழியான ரயில் பாதையில் சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும். பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூா், செந்தூா் ரயில்கள் மீண்டும் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com