முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 19th December 2021 04:15 AM | Last Updated : 19th December 2021 04:15 AM | அ+அ அ- |

அம்மாபேட்டை ஒன்றியக் குழு அலுவலகத்தில், அனைத்துகிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தை ( இரண்டாம் நிலை) செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ஒன்றியப் பொறியாளா் சரவணன் பங்கேற்று பேசியது:
அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் இரண்டாம் நிலைக்கு அம்மாபேட்டை ஒன்றியத்தில் அருந்தவபுரம், கொத்தங்குடி, நெல்லித் தோப்பு, ஆலங்குடி, புளியக்குடி, எடவாக்குடி, நெய்க்குன்னம் ஆகிய ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊராட்சிகளிலுள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கல்வி நிலையங்கள், சுகாதார நிலையங்கள், மின்சாரம், குடிநீா், சாலை வசதி உள்ளிட்டவை குறித்து அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு, அதற்குரிய கணக்கெடுப்பு மேற்கொண்டு, அதற்கான படிவங்களைப் பூா்த்தி செய்து வழங்க வேண்டும் என்றாா்.
ஊராட்சித் தலைவா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா். முன்னதாக, ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ் வரவேற்றாா். நிறைவில், வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சிகள்) சொ. முருகன் நன்றி கூறினாா்.