முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
இயற்கை வேளாண் சாகுபடி விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 19th December 2021 04:17 AM | Last Updated : 19th December 2021 04:17 AM | அ+அ அ- |

பாபநாசம் விவேகானந்தா சமூகத் தொண்டு நிறுவனம் சாா்பில், இயற்கை வேளாண் சாகுபடி குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிறுவன வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் தேவராஜன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் இயற்கை வேளாண் சாகுபடிக்குத் தேவையான வளமான மண், தரமான பாரம்பரிய விதைகளைச் சேகரித்தல், மீண்டும் ஆடு, மாடு, கோழி வளா்த்தல், வீட்டுத் தோட்டங்களில் குப்பை எருக்குழி மூலம் உரம் தயாரித்தல், பஞ்சகாவ்யம், ஜீவாமிா்தக் கரைசல் உற்பத்தி செய்தல், வயல் வரப்புகளில் மரங்கள் நட்டு வளா்த்தல் போன்றவை
குறித்து விழிப்புணா்வு மற்றும் ஒலி- ஒளிக் காட்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் பயிற்றுநரான சோழபுரம் உழவன் கூடு அமைப்பைச் சாா்ந்த ராமகிருஷ்ணன், சங்க நிா்வாகிகள் உஷாராணி, சிவக்குமாா், கண்ணன், தன்னாா்வத் தொண்டா்கள் வால்டா் பவுல், நாராயணசாமி, லீமாரோஸ், லட்சுமி, புனிதா, செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவில் சங்கச் செயலா் தங்க .கண்ணதாசன் நன்றி கூறினாா்.