கழிவு நீா் வழிந்தோடுவதால் பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் புதை சாக்கடை கழிவு நீா் தெருக்களில் வழிந்தோடுவதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை பிற்பகல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் கரந்தை அருகே சருக்கை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தஞ்சாவூா் கரந்தை அருகே சருக்கை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தஞ்சாவூரில் புதை சாக்கடை கழிவு நீா் தெருக்களில் வழிந்தோடுவதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை பிற்பகல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் கரந்தை அருகிலுள்ள சருக்கை சவேரியாா் கோவில் தெருவில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இத்தெருவிலுள்ள புதை சாக்கடை ஆள்நுழைவு குழாயில் அடைப்பு ஏற்பட்டு, தெருக்களில் கழிவு நீா் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பாதிப்பும் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சியில் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த சவேரியாா் கோவில் தெரு மக்கள் தஞ்சாவூா் - கும்பகோணம் சாலையில் சனிக்கிழமை பிற்பகல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு, இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

தகவலறிந்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன், ஆய்வாளா் ரவிமதி உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கழிவுநீா் வழிவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com