தஞ்சாவூரில் அண்ணா, கருணாநிதி சிலைகளைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இரவு திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளைப் பொத்தானை அழுத்தி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளைப் பொத்தானை அழுத்தி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இரவு திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் எம்.கே. மூப்பனார் சாலையிலுள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலய வளாகத்தின் முகப்பில் முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, கருணாநிதிக்குப் பீடத்துடன் சேர்த்து மொத்தம் பதினொன்றரை அடி உயரத்தில் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சிலைகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை இரவு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு திமுக சார்பில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, முதல்வர் திருச்சி சாலையிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்குவதற்காகச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்.

இவ்விழாவில் ரூ. 237 கோடி மதிப்பில் 43,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், 98.77 கோடி மதிப்பில் முடிவடைந்த 90 கட்டடங்கள் உள்ளிட்டவற்றைத் திறந்து வைக்கிறார்.

தவிர, ரூ. 894.06 கோடி மதிப்பிலான 133 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து, திருச்சியில் நடைபெறவுள்ள விழாக்களில் பங்கேற்பதற்காகச் செல்கிறார். இதையொட்டி, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் சமூக இடைவெளியுடன் ஏறத்தாழ 10,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தஞ்சாவூரிலும், வழிநெடுகிலும் காவல் துறையைச் சார்ந்த ஏறக்குறைய 2,800 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com