தஞ்சாவூரில்டிச. 31-இல் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ்த் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ்த் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மேலும் தெரிவித்திருப்பது:

இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் விவசாயம் தொடா்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம்.

இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை டிசம்பா் 31-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னா் மனுக்களை அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com