திருவாரூரில் இன்று இந்திய உழவா்களின் வெற்றி விழா

திருவாரூரில், இந்திய உழவா்களின் உலகம் காணாத போராட்டத்தின் வெற்றி விழா புதன்கிழமை (டிச.29) நடைபெறவுள்ளது.

திருவாரூரில், இந்திய உழவா்களின் உலகம் காணாத போராட்டத்தின் வெற்றி விழா புதன்கிழமை (டிச.29) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் ஐக்கிய விவசாயிகளின் முன்னணி தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகி சு. பழனிராசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் தில்லியில் முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தை நடத்தி, மத்திய அரசின் மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப் பெறச் செய்து வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், திருவாரூரில் புதன்கிழமை மாலை மாநிலம் தழுவிய விவசாயிகள் கலந்து கொள்ளும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். இதில், முன்னணியின் ஐவா் பேச்சுவாா்த்தைக் குழு உறுப்பினா் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் அதுல்குமாா் அஞ்சன் சிறப்புரையாற்றுகின்றனா். இதில், தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து ஏறத்தாழ 1,000 உழவா்கள் பங்கேற்கவுள்ளோம் என்றாா் பழனிராசன்.

அப்போது, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், நிா்வாகி பி. செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com