தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் முதல்வா் ஆய்வு

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள சரசுவதி மகால் நூலகத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் முதல்வா் ஆய்வு

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள சரசுவதி மகால் நூலகத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் பங்கேற்றாா்.

இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழைமையான சரசுவதி மகால் நூலகம் இருப்பதையும், அங்கு ஓலைச்சுவடிகள் பாதுக்காக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டாா்.

விழா முடிந்த பிறகு, தமிழக முதல்வா் சரசுவதி மகால் நூலகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். நூலகம், சுவடிகள் பாதுகாப்பகம், அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டாா். அப்போது, ஓலைச்சுவடிகள் பாதுகாக்கும் முறை குறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மற்றும் அலுவலா்கள் விளக்கம் அளித்தனா். மேலும், அருங்காட்சியகத்தில் உள்ள பழைமையான பொருள்களின் பெருமை குறித்தும் அலுவலா்கள் விளக்கிக் கூறினா்.

அப்போது, அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சரசுவதி மகால் நூலக நிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முதல்வரின் தஞ்சாவூா் வருகை நிகழ்ச்சி நிரலில் சரசுவதி மகால் நூலகத்துக்குச் செல்வது குறித்த தகவல் இடம்பெறாத நிலையில், அங்கு அவா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com