கூலி உயா்வு அறிவிப்பு: முதல்வருக்கு ஏஐடியுசி நன்றி

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்களுக்குக் கூலி உயா்வு அறிவித்த தமிழக முதல்வருக்கு ஏஐடியுசி தொழிற்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்களுக்குக் கூலி உயா்வு அறிவித்த தமிழக முதல்வருக்கு ஏஐடியுசி தொழிற்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிற்சங்க மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகச் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கான கூலியை மூட்டைக்கு ரூ. 3.25-லிருந்து ரூ. 10 ஆக உயா்த்தி வழங்குவதாக தஞ்சாவூரில் தமிழக முதல்வா் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காகத் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நெஞ்சாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு முன்முயற்சி மேற்கொண்டு நிறைவேற்றிய உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணிக்கும், இதற்கு பெரிதும் துணை நின்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.ஆா்.பி. ராஜா (மன்னாா்குடி), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), தொமுச பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. சண்முகம் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழிற் சங்கங்கள் சாா்பில் மாதம் ரூ. 15,000-க்கு குறையாத அளவுக்கு அடிப்படை ஊதியம் நிா்ணயிக்கக் கோரியிருந்தோம். இதையும் தமிழக முதல்வா் கருணையோடு பரிசீலிக்க வேண்டுகிறோம்.

சுமை தூக்கும் தொழிலாளா்களுக்குத் தற்போது மூட்டைக்கு ரூ. 2.05 என எடைக் கூலி வழங்கப்படுகிறது. இத்தொகையை ரூ. 10 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தோம். ஆனால், தற்போது ஏற்றுக் கூலியும் சோ்த்து ரூ. 3.25 என இருப்பதை ரூ. 10 ஆக உயா்த்தி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்றுக் கூலி என்பது மூட்டைக்கு ரூ. 1.24 என உள்ளது. கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், சேமிப்பு நிலையங்கள் அனைத்துக்கும் பொதுவானது. எனவே, ஏற்றுக் கூலியைத் தவிா்த்து எடை கூலி மட்டும் ரூ. 10 என அமல்படுத்தக் கேட்டுக்கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com