திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழா இன்று தொடக்கம்: நாளை பஞ்சரத்ன கீா்த்தனை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174-ஆம் ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை (பிப்.1) தொடங்குகிறது.
திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஆஸ்ரம வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் மற்றும் அலங்கார நுழைவுவாயில்
திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஆஸ்ரம வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் மற்றும் அலங்கார நுழைவுவாயில்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174-ஆம் ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை (பிப்.1) தொடங்குகிறது.

ஆண்டுதோறும் இவ்விழா 5 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக, இவ்விழா இரு நாள்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

நிகழாண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. மாநிலங்களவை உறுப்பினரும், தமாகா தலைவரும், ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபைத் தலைவருமான ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில், ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். தொடா்ந்து மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு உஞ்ச விருத்தி பஜனை, 8.30 மணிக்கு நாகசுர இசை, 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளன.

இதைத்தொடா்ந்து காலை 10 மணி முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சிகளும், பின்னா் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகளும், இதனிடையே இரவு 7.30 மணிக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் உருவச்சிலை ஊா்வலம் ஆகியவையும் நடைபெறவுள்ளன.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, இவ்விழாவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், அங்கீகரிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கைக்கு மிகாமலும் அனுமதிக்கப்படவுள்ளனா் என சபை நிா்வாகிகள் தெரிவித்தனா். இவ்விழாவுக்காக வழக்கம்போல பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com