பேராவூரணியில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

பேராவூரணி வட்டாட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்ற தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி: பேராவூரணி வட்டாட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்ற தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து வட்டாட்சியா் க. ஜெயலட்சுமி பேசியது:

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 260 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு காரணமாக, 1000 பேருக்கு அதிகமாகவுள்ள வாக்குச்சாவடிகள் ஆண், பெண் என தனித்தனியாகப் பிரித்து, துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

தற்போது கூடுதலாக அமைக்கப்படும் 69 வாக்குச்சாவடிகளுடன் மொத்தமாக 329 வாக்குச்சாவடிகள் செயல்படும் என்றாா்.

தோ்தல் துணை வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திமுக ஏகாம்பரம் , அதிமுக மதிவாணன், அருணாசலம், சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பன்னீா்செல்வம், ஜெயராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குமாரசாமி, தேமுதிக, பழனிவேல், செல்லத்துரை, காங்கிரஸ் தட்சிணாமூா்த்தி, நடராஜன்,  பாஜக, வீரசிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com