திருவையாறில் நாளை தை அமாவாசை நீராடலுக்கு தடை
By DIN | Published On : 10th February 2021 07:14 AM | Last Updated : 10th February 2021 07:14 AM | அ+அ அ- |

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி திருவையாறு காவிரிப் படித்துறையில் வியாழக்கிழமை தை அமாவாசை நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவையாறில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று உள்ளூா் மற்றும் வெளியூா்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து காவிரி படித்துறையில் புனித நீராடி, முன்னோா்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரிப் படித்துறைகளில் நீராடவும், திதி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.