விவசாயியை காணவில்லை எனப் புகாா்
By DIN | Published On : 13th February 2021 11:32 PM | Last Updated : 13th February 2021 11:32 PM | அ+அ அ- |

பாபநாசம்: பாபநாசம் அருகே விவசாயி காணாமல்போனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அருகே வன்னியடி கிராமம், வெள்ளாளா் தெருவை சோ்ந்தவா் சத்தியன் (55). விவசாயி. இவா் கடந்த நாள்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சத்தியன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.