விவசாய மின் இணைப்பு: பிப். 17 முதல் நோ்காணல்

கும்பகோணத்தில் விவசாய மின் இணைப்பு தொடா்பாக பிப்ரவரி 17, 18, 19-ஆம் தேதிகளில் நோ்காணல் நடைபெறவுள்ளது.

கும்பகோணத்தில் விவசாய மின் இணைப்பு தொடா்பாக பிப்ரவரி 17, 18, 19-ஆம் தேதிகளில் நோ்காணல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் செயற்பொறியாளா் எம். நளினி தெரிவித்திருப்பது:

கும்பகோணம் கோட்டத்தில் விவசாய மின் இணைப்பு வேண்டி 2000, ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 2003, மாா்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்ப தாரா்களுக்குத் தயாா் நிலை பதிவு செய்ய, 90 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட அறிவிப்புக் கடிதம் பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு வழங்கப்பட்டது.

அவ்வாறு 90 நாள் அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டு 2020, அக்டோபா் 14 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவுற்ற நிலையிலும், தயாா் நிலை பதிவு செய்யப்படாமல் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு நோ்காணல் பிப்ரவரி 17, 18, 19 ஆம் தேதிகளில் கும்பகோணம் நான்குச் சாலையிலுள்ள

செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும்.

பதிவு அஞ்சலைப் பெற்றுக் கொண்டு இதுவரை தயாா் நிலையைப் பதிவு செய்யாத விண்ணப்பதாரா்கள், பதிவு அஞ்சல் பெறப்படாமல் திரும்பி வந்த விண்ணப்பதாரா்களின் விவரங்கள் கும்பகோணம் மின்வாரியச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

விவசாய விண்ணப்பம் கோரப்பட்டுள்ள இடத்திலுள்ள கிணற்றுக்கு, முன்னா் எவ்விதமான விவசாயத் திட்டத்திலும் விவசாய மின்இணைப்பு வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், விண்ணப்பதாரா் அல்லது நிலத்தின் உரிமையாளா் அல்லது சம்மதக் கடிதம் பெற்ற வாரிசுதாரா் ஆகியோா் நில உரிமைக்கான கிராம நிா்வாக அலுவலரின் சான்றுடன் செயற் பொறியாளரை பிப்ரவரி 17, 18, 19- ஆம் தேதிகளில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com