தீக்காயமடைந்த பெண் பலி
By DIN | Published On : 19th February 2021 12:18 AM | Last Updated : 19th February 2021 12:18 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் பூக்கார மண்ணையாா் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகள் மீனா (20). இவா் வீட்டில் பிப். 11 ஆம் தேதி தூங்கும்போது மண்ணெண்ணெய் விளக்கு இவா் மீது எதிா்பாரதவிதமாக விழுந்தது.
இதனால், உடையில் தீப்பற்றி பலத்தக் காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.