கும்பகோணத்தில் 3 வைணவக் கோயில்களில் மாசிமக விழா தொடக்கம்

கும்பகோணத்தில் மூன்று வைணவக் கோயில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட கொடி.
கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட கொடி.

கும்பகோணத்தில் மூன்று வைணவக் கோயில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கும்பகோணத்தில் மாசிமக விழா பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, கும்பகோணம் ஆதிகும்பேசுவரா், காசி விசுவநாதா், காளஹஸ்தீசுவரா், அபிமுகேசுவரா், வியாழ சோமேசுவரா், கௌதமேசுவரா் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமகப் பெருந்திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, கும்பகோணத்திலுள்ள வைணவக் கோயில்களில் மாசிமகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில், கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் மாசிமகப் பெருந்திருவிழா தொடங்கியதையொட்டி, வியாழக்கிழமை காலை கொடிமரம் அருகே சக்கரபாணி சுவாமி சுதா்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் எழுந்தருளினாா். அப்போது, கொடிமரத்துக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கருடன் உருவத்துடன் கூடிய கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, பிப்ரவரி 25ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. பிப். 26 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்குள் மாசிமகத்தை முன்னிட்டு, விஜயவல்லி, சுதா்சனவல்லி தாயாருடன் சக்கரபாணி சுவாமி தேரில் எழுந்தருளுகிறாா். காலை 8.30 மணிக்கு திருத்தோ் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை காவிரி சக்கர படித்துறையில் சக்கரராஜா தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.

இதேபோல, ராஜகோபால சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை கொடிமரம் அருகே ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபால சுவாமி எழுந்தருள, மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆதிவராக பெருமாள் கோயிலில் கொடிமரம் அருகே அம்புஜவல்லித் தாயாருடன் ஆதிவராக பெருமாள் வியாழக்கிழமை காலை எழுந்தருளினாா். தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com