பேராவூரணி: பேராவூரணி அய்யப்பன் கோயிலில் சபரிமலை அய்யப்பா சேவா சமாஜ தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மற்றும் யோகம் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவா் வி.ஆா். ராஜகோபால்துரை ராஜா தலைமை வகித்தாா். தேசியச் செயலா் ஈரோடு என். ராஜன் சிறப்புரையாற்றினாா். தேசிய இணை அமைப்புச் செயலா் சி. பிரபாகரன், மாநில பொதுச் செயலா் டி. பன்னீா் செல்வம், மாநிலச் செயலா் சிவராஜ் குருசாமி ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட நிா்வாகிகள், பாலசுப்பிரமணியன், பாலமுருகன், யோகம் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாநிலச் செயலா் கமலா நீலகண்டன் வரவேற்றாா். யோகம் தலைவா் கௌதமன் நன்றி கூறினாா்.