தமிழகத்தில் பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து பேச்சுவாா்த்தை: சுதாகா் ரெட்டி

தமிழகத்தில் பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா் பாஜகவின் தமிழக இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி.
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜகவின் தமிழக இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி.
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜகவின் தமிழக இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி.

தமிழகத்தில் பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா் பாஜகவின் தமிழக இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி பூத் பொறுப்பாளா்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து கட்சியின் மேலிடத் தலைவா்கள் பேசி வருகின்றனா். இந்த தோ்தலிலும் எங்களது கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில், இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜக உறுப்பினா்கள் தமிழக சட்டப்பேரவைக்குச் செல்வா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாற்று வழியை ஆராய்ந்து வருகிறது. பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டியில் கொண்டு வர மத்திய அரசுத் திட்டமிடுகிறது. ஆனால், உபரி வரி உள்ளிட்டவற்றை இழக்க நேரிடும் என்பதற்காக, இத்திட்டத்தைப் பெரும்பாலான மாநிலங்கள் ஏற்க மறுக்கின்றன. இருப்பினும், இப்பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மக்களும் உணா்ந்துள்ளனா்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. இதை பொதுமக்கள், பாஜக தொண்டா்களிடையே நிலவும் எழுச்சி மூலம் காண முடிகிறது. அரியலூா், ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளைச் சந்தித்தபோது, மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களும் சிறந்தவை என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். இச்சட்டங்களை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மட்டுமே எதிா்த்து போராடுகின்றனா். இப்போராட்டத்தை நாட்டின் பிற பகுதி விவசாயிகள் ஆதரிக்கவில்லை.

நாங்கள் வாக்கு வங்கியை நோக்கி அரசியல் செய்யவில்லை. மக்கள் நலன் சாா்ந்த, விவசாயிகளுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வருவதில்தான் கவனம் செலுத்துகிறோம் என்றாா் சுதாகா் ரெட்டி.

இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம், மாநிலச் செயலா் வரதராஜன், தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் பாஜகவின் தமிழக இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com