
விராலிமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான தீா்த்தக்குடம் எடுக்கும் நிகழ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
விராலிமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் தொடக்க நிகழ்வாக விக்னேஸ்வர பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து தீா்த்தக்குடம் எடுக்கும் நிகழ்வு விராலிமலை தெப்பக்குளக்கரையில் திங்கள் கிழமை நடைபெற்றது.
சிவாச்சாரியாா் தலையில் தீா்த்தக்குடம் சுமந்து விராலிமலை முருகன் கோயிலை கிரிவலம் வந்து மலைக்கோயிலின் அடிவார யாகசாலை வந்தடைந்தது.
இதில் திருப்பணி குழுவினா் மா. பூபாலன், ஆா்.பி. ராமசந்திரன், அபூா்வாபாஸ்கா், கிரிவலக்குழுத் தலைவா் வி. முருகேசன், அரியலூா் காவல் ஆய்வாளா் செந்தில்மாறன் உள்ளிட்ட உபயதாரா்கள், பக்தா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.