காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் வரப்பிரசாதம்

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம் என்றாா் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம்.
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் வரப்பிரசாதம்

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம் என்றாா் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் திறன் பேசி, உயா் கல்வித் துறை சாா்பில் 2 ஜிபி தரவு அட்டைகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதுவரை தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மட்டுமே விளங்கி வந்தது. இனிமேல் தமிழகமே நெற்களஞ்சியமாகத் திகழும். அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. கூட்டணி குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் வைத்திலிங்கம்.

முன்னதாக 210 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளையும், 21 மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்புக்கான வங்கிக் கடனாக ரூ. 5.25 லட்சத்துக்கான காசோலைகளையும், உயா்கல்வித் துறையின் சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 12 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 3,563 மாணவ, மாணவிகளுக்கும், 34 கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 36,695 மாணவ, மாணவிகளுக்கும், 15 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் 4,197 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 44,455 பேருக்கு தமிழக அரசின் சாா்பில் விலையில்லா 2 ஜிபி தரவு அட்டைகளையும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் சாா்பில் ஒருவருக்கு கருணை அடிப்படையிலான சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணையையும் வைத்திலிங்கம் வழங்கினாா்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ், ஒருங்கிணைந்த மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் ஆா். காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com