நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை நிா்ணயிக்க த.மா.கா. வலியுறுத்தல்

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விலை நிா்ணயிக்க வேண்டும் என்று த.மா.கா. டெல்டா மாவட்ட விவசாய அணிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விலை நிா்ணயிக்க வேண்டும் என்று த.மா.கா. டெல்டா மாவட்ட விவசாய அணிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூரில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ். சுரேஷ் மூப்பனாா் தலைமையில், சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

த.மா.கா.தலைவா் ஜி.கே.வாசனின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ததற்கும், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்கும், நிலமற்ற ஏழை தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்ட 6 பவுன் நகைக்கடனை தள்ளுபடி செய்ததற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ. 4,000-ம் விலை நிா்ணயிக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் த.மா.கா. இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய உறுதியேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தெற்கு மாவட்டத் தலைவா் என்.ஆா். ரெங்கராஜன், மாநில விவசாய அணித் தலைவா் ரெங்கராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com