மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைபெறாதவா்களுக்கு ஜன. 5-இல் சிறப்பு முகாம்

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக, ஜனவரி 5-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக, ஜனவரி 5-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக ஒன்றிய வாரியாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 13 இடங்களில் முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இம்முகாமில் எலும்பு முறிவு, காது, மூக்கு,தொண்டை, மனநலன், கண் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கவுள்ளனா்.

மருத்துவ அலுவலா் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

இதன்படி தஞ்சாவூா் ஒன்றியம், மாநகரப் பகுதியைச் சாா்ந்த மாற்றுத் திறனாளிகளுக்காக, மேம்பாலம் பகுதியிலுள்ள அரசுச் செவிதிறன் பாதிக்கப்பட்டோருக்கான மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 5- ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் தஞ்சாவூா் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து வாா்டுகளில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com