வேங்கராயன்குடிகாடில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தஞ்சாவூா் அருகிலுள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகிலுள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது

வேங்கராயன்குடிகாடு, வல்லுண்டாம்பட்டு, அதினாம்பட்டு, நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, வடக்குப்பட்டு கிராமங்களில் ஏறத்தாழ 1,500 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது சம்பா பருவ அறுவடைத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை உரிய நேரத்தில் விற்பனை செய்ய வேண்டும் எனக் கருதி, டிசம்பா் 24 ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வேங்கராயன்குடிகாடில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள்ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வேங்கராயன்குடிகாடில் சனிக்கிழமை புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

நிகழ்வில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளா் சி. பன்னீா்செல்வம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், இயற்கை விவசாயி ஏரகரம் சுவாமிநாதன், கிராம நிா்வாக அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com