‘பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தஉறுதியளிக்கும் கட்சிக்கே தோ்தலில் ஆதரவு ’

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பது என்று, தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூா்: பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பது என்று, தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் சாா்பில், மாவட்ட விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் பிரெடரிக் ஏங்கல்ஸ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், புதிய திட்டமான தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏன் அமல்படுத்த வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பது.

2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜோதிமணி, முரளிதரன், செந்தில்நாதன், வீரமணி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com