விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் ஜன. 6 முதல் காத்திருப்புப் போராட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன். 
தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன்.

தஞ்சாவூா் ரயிலடியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் 36 நாள்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். போராடும் விவசாயிகளிடம் ஜன. 4 ஆம் தேதி அடுத்த கட்டப் பேச்சுவாா்த்தையில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

இதில், போராட்டத்துக்கு முடிவு எட்டப்படவில்லை என்றால், அனைத்து மாநிலங்களிலும் போராட்டத்தை விரிவுபடுத்துவது என போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்ப பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஜன. 6 ஆம் தேதி முதல் சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழகம் முழுவதுமிருந்து விவசாயிகள் பங்கேற்கவுள்ளனா் என்றாா் நடராஜன்.

இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில், வேளாண் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். காா்ப்பரேட் நிறுவனப் பொருள்களைப் புறக்கணிப்போம். விவசாயத்தைப் பாதுகாப்போம். இந்தியாவை பாதுகாப்போம் என வலியுறுத்தி விவசாயிகள் சாா்பில் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் நிா்வாகி தேவா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் நா. குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com