மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இச்சங்கத்தின் 57 ஆம் ஆண்டு இறுதிப் பொது பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையின்போது பயணிகள் அருகிலுள்ள ஊா்களுக்குச் சென்று வர வசதியாக, மயிலாடுதுறை - திருச்சி ரயில் பாதையில் அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க ரயில்வே நிா்வாகம் முன் வர வேண்டும்.

பயணிகள் பயன்பாடு மிகுந்த பாபநாசம் ரயில் நிலையத்தில், சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் விரைவு ரயில் மற்றும் மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயிலுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி, மயிலாடுதுறை - திருவாரூா், காரைக்கால் - தஞ்சாவூா் - திருச்சி ஆகிய ரயில் பாதைகளில் இயங்கும் சாதாரண பயணிகள் ரயில்களை மின்சார ரயில்களாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 2020 - 2023 ஆம் ஆண்டுகளுக்கான சங்கப் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், தலைவராக பி.கே.டி. சண்முகம், துணைத் தலைவராக ஜமீல், செயலராக ஏ. கிரி, பொருளாளராக எம். மாறன், இணைச் செயலா்களாக சி. சுப்ரமணியன், டி. சரவணன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com