வடசேரியில் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 07th January 2021 08:30 AM | Last Updated : 07th January 2021 08:30 AM | அ+அ அ- |

ஒரத்தநாட்டை அடுத்த வடசேரியில் புதன்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வடசேரி ஊராட்சி மன்றம் மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஊராட்சித் தலைவா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி சிவசங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா்.
இதில், எடை மற்றும் உயரம், ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு, இசிஜி, எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையும், பரிசோதனையும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா். முன்னதாக, ஊராட்சி துணைத் தலைவா் லாவண்யா ரவிக்குமாா் வரவேற்றாா்.