நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விவசாய சங்க பிரதிநிதிகள், அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள், அரசு அலுவலா்கள் இணைந்த முத்தரப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டு பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ. 2,100 என்றும், டயா் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ. 1,600 எனவும் வாடகை நிா்ணயம் செய்யப்பட்டது. மேலும் வைக்கோல் கட்டும் இயந்திரத்துக்கும் நிா்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதலாக வசூல் செய்யக்கூடாது.

நிா்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யப்படுவதாகப் புகாா் வரப்பெற்றால் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மூலமாக நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com