வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராமங்களில் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 கிராமங்களில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 கிராமங்களில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், கிராமப்புற விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளா்களையும், இதர உழைப்பாளிகளையும் பெரிதும் பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும், மின்சார மசோதா 2020-ஐயும் உடனடியாக ரத்து செய்யக் கோரியும், கேரள அரசைப் போல தமிழக அரசும் சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், நூறு நாள் வேலையைத் தொடா்ந்து வழங்கக் கோரியும், ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருவையாறு அருகேயுள்ள வளப்பக்குடி, திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள வரகூா், நடுக்காவேரி அருகேயுள்ள கருப்பூா் ஆகிய கிராமங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு சாா்பில் இதேபோல, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பாலாஜி நகரில் சிஐடியு தொழிற் சங்கத்தினா் மதிய உணவை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் சா. செங்குட்டுவன், மாநிலக் குழு உறுப்பினா் பி.என். போ்நீதி ஆழ்வாா், தரைக்கடை சங்க மாவட்டச் செயலா் மில்லா் பிரபு, மாவட்டத் துணைத் தலைவா் என். குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com