
விழாவில் பங்கேற்றவா்கள்.
கும்பகோணம் காா்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காா்த்தி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஆசிரிய, ஆசிரியைகள் புதுப்பானை வைத்து பொங்கல் இட்டு, மாக்கோலம் வரைந்தும், குழவை இட்டும், கும்மி பாடலுடனும் மிகவும் பாரம்பரிய முறையிலும் கொண்டாடினா்.
இந்த விழாவில் காா்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் காா்த்திகேயன், பன்னாட்டுப் பள்ளித் தாளாளா் பூா்ணிமா காா்த்திகேயன் கலந்து கொண்டு தமிழரின் சிறப்பு, பொங்கல் பண்டிகையைப் பற்றி சிறப்புரையாற்றினா்.
பள்ளி முதல்வா் அம்பிகாபதி, ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.