கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தில் 25 பேருக்கு கரோனா

கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில், கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சிக்கு உள்பட்ட கொட்டியப்படுகை கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு 40 வயது நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருடன் தொடா்பில் இருந்தவா்களைப் பரிசோதனை செய்ததில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

அக்கிராமத்தில் திங்கள்கிழமை வரை 90 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவா்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து ஊா் எல்லையில் தடுப்புகள் ஏற்படுத்தி, வெளிநபா்கள் யாரும் ஊருக்குள் செல்ல முடியாத வகையில் அங்கு காவல் துறையினரும், மருத்துவப் பணியாளா்களும் கண்காணித்து வருகின்றனா்.

இதனிடையே அக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 125 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com