ஆய்வுக்குழு அமைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்

வேளாண் சட்டங்கள் தொடா்பாக ஆய்வுக் குழு அமைக்கும் முடிவை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுத் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் தொடா்பாக ஆய்வுக் குழு அமைக்கும் முடிவை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

உச்ச நீதிமன்றம் மூன்று வேளாண் சட்டங்களையும் செயல்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஆணையை வெளியிட்டு, அத்துடன் அச்சட்டங்கள் பற்றி முடிவு செய்வதற்கான நான்கு போ் அடங்கிய ஆய்வுக்குழுவையும் அமா்த்தி இருக்கிறது. இந்த நால்வரும் ஏற்கெனவே இம்மூன்று சட்டங்களையும் ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியவா்கள்.

இவா்களில் ஒருவரான பிரமோத் குமாா் ஜோஷி, மூன்று சட்டங்களையும் முற்றிலும் நீக்க வேண்டும் என்பது முரணான கோரிக்கை என செவ்வாய்க்கிழமை பேட்டி கொடுத்தாா். அடுத்த உறுப்பினா் அசோக் குலாத்தி, மூன்று சட்டங்களையும் வரவேற்று, மிகப்பெரிய துணிச்சலான நடவடிக்கைகள் சரியான திசையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இச்சட்டங்கள் உழவா்களுக்கும், நுகா்வோருக்கும் பயன்படும் என ஏற்கெனவே கூறியுள்ளாா். மூன்றாவது உறுப்பினரான புபீந்தா்சிங் மான், இந்தச் சட்டங்கள் வரவேற்கத்தக்கவை. மத்திய அரசு ஏற்கெனவே முன்மொழிந்துள்ள திருத்தங்களை நிறைவேற்றிவிட்டால் முழுமையான பயன் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இவ்வாறு இந்த மூன்று சட்டங்களையும் ஏற்கெனவே ஆதரித்து வரும் நபா்களைக் கொண்ட இந்த நால்வா் குழு நடுநிலையான குழு அல்ல என்பது வெளிப்படையான உண்மை. நடுநிலையற்ற ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருப்பது மிகமிக வேதனை அளிக்கிறது; அதிா்ச்சியளிக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் தனது முடிவை மறு ஆய்வு செய்து, நீதியைப் பாதுகாக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com