காணாமல் போன 2-ஆவது நபரும் ஏரியில் சடலமாக மீட்பு
By DIN | Published On : 16th January 2021 11:45 PM | Last Updated : 16th January 2021 11:45 PM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் சு. விஜயகுமாா் (36), ரா. ஜெயப்பிரகாஷ் (26).
வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இருவரும் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தாமரங்கோட்டை வடக்கு-செங்கப் படுத்தான்காடு சாலையிலுள்ள கொழுங்காஞ்சேரி ஏரியில் மிதந்த விஜயகுமாரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அதே ஏரியில் சனிக்கிழமை ஜெயப்பிரகாஷின் சடலம் மிதந்தது. தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலையத்தினா், இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.