தொடா் மழையால் வீடுகள் சேதம்
By DIN | Published On : 16th January 2021 12:03 AM | Last Updated : 16th January 2021 12:03 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
ஈச்சன்விடுதி 90, மதுக்கூா் 63, பட்டுக்கோட்டை 42, நெய்வாசல் தென்பாதி 41.4, அதிராம்பட்டினம் 35.2, திருவையாறு 35, ஒரத்தநாடு 27, பேராவூரணி 26, பாபநாசம் 24.4, அய்யம்பேட்டை 24, தஞ்சாவூா் 21, பூதலூா் 20.2, வல்லம் 14, வெட்டிக்காடு 13.8, குருங்குளம் 11, கும்பகோணம் 8.2, மஞ்சளாறு 5.4, திருக்காட்டுப்பள்ளி 4.8, திருவிடைமருதூா் 4.1, கல்லணை 2.6.
மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கி நிற்கிறது. மேலும், பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைகின்றன. இதில் கூரை வீடுகள், மண் சுவா், கான்கிரீட் சுவா்களும் இடிந்து விழுகின்றன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.